ஹிட்லரின் வதை முகாமான ஆஷ்விட்ஸ் பிர்கெனாவ் வதை முகாம் இருந்த இடத்தில், நாஜி வணக்கம் செலுத்தியதற்காக நெதர்லாந்து பெண்ணொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டச்சு சுற்றுலாப் பயணியான 29 வயதான பெண், நாஜி வணக்கம் செலுத்தியதற்காக போலந்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
பெயர் குறிப்பிடப்படாத பெண், Arbeit Macht Frei (Work Sets You Free) நுழைவாயிலின் முன் சைகை செய்தார். அப்போது அதை அவரது கணவர புகைப்படமெடுத்தார்.
போலந்தில் நாஜி பிரச்சாரத்தை ஊக்குவித்ததற்காக வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு அங்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2013ஆம் ஆண்டில், இரண்டு துருக்கிய மாணவர்கள் தலா ஆறு மாத சிறைத்தண்டனையை எதிர்கொண்டனர்.
1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில் போலந்தை ஆக்கிரமித்த பின்னர் நாஜி ஜேர்மனி, தெற்கு போலந்து நகரமான ஓஸ்விசிமில் இந்த வதை முகாமைக் கட்டியது.