பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவின் கிழக்கு பைபாஸ் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புத் துறையின் நடவடிக்கையில் குறைந்தது ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்புத் துறையை மேற்கோள் காட்டி இதுகுறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இதன்போது, தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பயங்கரவாத கும்பலில் இருந்த ஒருவரை பிடிப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் இரண்டு மில்லியன் பரிசுத்தொகையை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னதாக கடந்த சனிக்கிழமை, பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதன்போது, பயங்கரவாதிகள் பயங்கரவாத எதிர்ப்புத் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், அதற்கு பலமாக பதிலடி கொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.