கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரோன் மாறுபாட்டை வெற்றிகரமாக கையாளுவதற்கு தேவையான நிபுணர் ஆலோசனைகள் அடங்கிய விரிவான அறிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாரித்துள்ளது.
12 விசேட வைத்தியர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை இவ்வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களை பொது இடங்களுக்குள் அனுமதிக்கவும், வீடுகளில் இருந்தபடியே சுயமாக அன்டிஜென் பரிசோதனையை செய்வதற்கான கருவிகளை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதாரப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.