தென் சீனக் கடற்பகுதியில் அமெரிக்க போர் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஏழு அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் விமானி வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி கப்பலின் மேல்தளத்தில் எஃப்-35சி போர் விமானம் தரையிறங்கிய போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
தென் சீனக் கடலில் வழக்கமான விமான நடவடிக்கைகளின் போது இந்த சம்பவம் நடந்ததாக கடற்படை அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விமானத்தில் இருந்து விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார் மற்றும் அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டார்.விமானி நிலையான நிலையில் உள்ளார்.
மொத்தம் ஏழு மாலுமிகள் காயமடைந்துள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிலாவில் உள்ள ஒரு மருத்துவ வசதிக்கு மூன்று இராணுவ வீரர்கள்; வெளியேற்றப்பட வேண்டும் என்றும் நான்கு பேர் கப்பலில் சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளியேற்றப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களும் நிலையான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பசிபிக் கடல் பகுதியில் சீன ஆக்ரமிப்பை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.