வெளிநாட்டு நிதி விவகாரத்தில் பிரதமர் இம்ரான் கான், கட்சியின் முக்கிய ஆவணங்களை மறைத்துள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் ஆய்வுக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட ஆவணங்களில் காணப்படும் 28 வங்கி அறிக்கைகள் மற்றும் 2009 இலிருந்து 2013க்கு இடைப்பட்ட காலத்தில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட வெளிநாட்டு நிதிகளின் ஆண்டு வாரியான விபரங்கள் அடங்கியுள்ளன.
தேர்தல் ஆணையக ஆய்வுக்குழுவின் சொந்த விருப்பத்தின்படி இந்த முக்கியமான ஆதாரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆய்வுக்குழுவின் அறிக்கையின் பக்கம் 83இல் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் கணக்கு அறிக்கையின் பகுதிகளின் அடிப்படையில் கணக்குகள் தயாரிக்கப்பட்டவை என குழு கருதுவாக கூறியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் மத்திய வங்கியின் மூலம் பெறப்பட்ட வங்கி அறிக்கைகள் இரகசியமாக வைக்கப்படலாம் மற்றும் பொது களத்தில் வெளியிடப்படாமல் இருக்கலாம்’ என்று பாகிஸ்தான் ஆணையகம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் மத்திய வங்கியிடம் ஆணையகத்தால் கோரப்பட்ட ஆவணங்கள் கிடைக்கப்பட்டுள்ளதை அடுத்து அவை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன, அவை பகுதியாளவில் காணப்படாதுள்ளதாகவும் ஆணையகத்தின் அறிக்கையின் இணைப்புகள் பிரிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, இம்ரானின் கட்சிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ள மனுதாரர் அக்பர் எஸ் பாபருடன் ஜனவரி 4இல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், கட்சிக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக இம்ரானின் கட்சி ‘தவறான தகவல்களை’ வழங்கியதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிகப்பாக பாகிஸ்தான் மத்திய வங்கியின் அறிக்கையின்படி கட்சிக்கு 1.64 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. ஆனால் அது உரிய முறையில் காண்பிக்கப்படவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சி வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டு பிரஜைகளிடமிருந்து நன்கொடைகளை மூலம் பெறப்பட்ட நிதிகளுக்கு முறையான கணக்கினை காண்பிக்காததன் காரணமாக அந்த நிதி பறிமுதல் செய்யப்படலாம் என சட்டவாளர்கள் கூறுகின்றார்கள்.
அரசியல் கட்சிகளின் நிதி விவகாரம் பிரிவு 6(3) இன் பிரகாரம் முறையான கணக்குள் காண்பிக்கப்படாதவிடத்து நன்கொடை நிதியாக இருந்தாலும் அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றது.
எனினும், குறித்த அரசியல் கட்சி மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இருப்பினும் அதன் வெளிநாட்டு நிதி வருகையை கட்டுப்படுத்த முடியும் என்றும் சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.