குறைபாடுகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெற விரும்பும் நுகர்வோரை அனுமதிக்குமாறு நுகர்வோர் விவகார ஆணையம் எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
மேலும் இவ்வாறான எரிவாயு சிலிண்டர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் விநியோகஸ்தர்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
1977 என்ற இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.