வட கொரியா, இன்று(வியாழக்கிழமை) கிழக்குக் கடலில் அடையாளம் தெரியாத ஏவுகணையினை சோதனை செய்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இந்த ஆண்டு வட கொரியா ஆறாவது முறையாக ஏவுகணையை சோதனையினை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பினை புறக்கணித்த வட கொரியா, தொடர்ந்து தனது இராணுவ வலிமையைப் பறைசாற்றி வருகின்றது.
கடந்த 5ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் இரண்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும், 14ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையையும் நடத்தியதாக வட கொரியா அறிவித்தது.
கிழக்கு கடற்கரையிலுள்ள ஹம்ஹங் வழியாக, தனது அண்டை நாடான வடகொரியா, இரண்டு சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா குறிப்பிட்டது.