இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) மேலும் 942 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 7 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த அனைவரும் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ் ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 2 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 10 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 20 பேர் கடந்த 26ஆம் திகதி உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 77 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.