ஹொங் கொங்கின் சுதந்திர ஆர்வலர் எட்வேர்ட் லியுங் 2016ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக நான்கு ஆண்டுகள் தண்னையை அனுபவித்த நிலையில் லாண்டவ் தீவில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், 30 வயதான லியுங் சிறையிலிருந்து வெளியேறியுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், லியுங் தனது முகநூல் பக்கத்தில், தான் விடுவிக்கப்பட்டதாகவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாகவும், அனைத்து ஊடக நேர்காணல்களையும் நிராகரிப்பதாகவும் பதிவொன்றைச் செய்துள்ளார்.
அதேநேரம் லியுங் கண்காணிப்பு உத்தரவுக்கு உட்பட்டவர் என முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கான விதிகளை பின்பற்ற வேண்டியர் என்றும் தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டியுள்ளது.
‘நான்கு வருடங்களாகப் பிரிந்து, எனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைவதற்கும், அவர்களுடன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் மதிப்புமிக்க நேரத்தை பயன்படுத்தவே நான் விரும்புகிறேன்,’ என்று அவர் தனது முகநூலில் பதிவிட்டிருக்கின்றார். அத்துடன் அனைவரின் அக்கறைக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எட்வேர்ட் லியுங் கடந்த ஆறு ஆண்டுகளாக தனது தண்டனையை அனுபவித்து வந்துள்ளார். பெப்ரவரி 2016 இல் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக, சீனாவால் விதிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டார்.
குறிப்பாக, பிரிவினை, நாசவேலை, பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் செயற்பாடு உள்ளிட்ட விடயங்களுடன் தொடர்புபட்டவர் என கைதுக்கான காரணமாக கூறப்பட்டது.
சீனா தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் ஹொங் கொங்கின் மீதான கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. அத்துடன் தன்னாட்சி நகரத்தில் உள்ள மக்கள் அதிகரித்து வரும் காவல்துறை மற்றும் அடக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.
ஊடக அறிக்கையின்படி, ஹொங் கொங்கின் பெரும்பாலான எதிர்க்கட்சி சட்டமியற்றுபவர்கள், ஆர்வலர்கள் சிறையில் உள்ளனர். அல்லது தேசிய பாதுகாப்பு சட்ட ஒடுக்குமுறை தொடங்கியதிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.