அரசியல்வாதிகள் மற்றும் மீனவர்களின் அழுத்தத்திற்குப் பின்னர், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சி அயர்லாந்து கடற்கரையிலிருந்து மேலும் நகர்த்தப்பட்டது.
நடைபெற இருந்த “லைவ்-ஃபயர்” பயிற்சி தமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே மாற்றப்படும் என அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சைமன் கோவேனி கூறியிருந்தார்.
மேலும் தமது பொருளாதார மண்டலத்திற்குள் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளை அயர்லாந்து வரவேற்காது என்றாலும் ரஷ்யாவைத் தடுக்க அந்நாட்டுக்கு அதிகாரம் இல்லை என கோவேனி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த பயிற்சியை இடமாற்றம் செய்வதற்கான முடிவு “நன்மையின் சைகையாக” எடுக்கப்பட்டதாக அயர்லாந்திற்கான ரஷ்ய தூதர் யூரி ஃபிலடோவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
அத்தோடு பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் ஐரிஷ் கப்பல்களால் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.