நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு காணி சொந்தமாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திரப்பனையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர், இதனை தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிலத்தின் உரிமையை வழங்குவதற்கும், அவர்களை மூலதனத்துடன் பலப்படுத்துவதற்கும் தான் கொள்கையொன்றை வகுத்ததாக கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் குடிமக்கள் பெருமையுடன் வாழ முடியும் என தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சில நபர்கள் எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார்.
தனிப்பெரும்பான்மையுடன் பொதுமக்களுக்கு சேவையாற்ற முடியும் என தெரிவித்த சஜித் பிரேமதாச, தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை எனவும் தெரிவித்தார்.