உலக நாடுகள் பலவற்றில் Omicron வகை கொரோனா இதுவரை உச்சத்தை எட்டவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் குறைவாக உள்ளதால் நோயால் எளிதில் கடுமையாகப் பாதிப்படையக்கூடிய மக்கள் அதிகமானோர் இருக்கலாம் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
சில நாடுகளில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், ஒமிக்ரோன் கிருமி கடுமையாகப் பாதிக்காது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.
நோயைத் தடுப்பது முடியாத ஒன்று என்றாலும் அதைத் தடுப்பதற்குத் தேவை இல்லை என்ற கருத்தும் பலரிடையே தோன்றுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அது முற்றிலும் உண்மையில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
உலக நாடுகள் அவற்றின் மக்களை முடிந்த எல்லா வழிகளிலும் பாதுகாக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, Omicron வகையின் புதிய துணை திரிபுகள் 57 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.