இந்தியாவில் இதுவரை 167.87 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி நேற்று (புதன்கிழமை) 55,10,693 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 1,67,87,93,137 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான சைடஸ் கேடிலா, கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.
இந்த தடுப்பூசிகளை மூன்று தவணைகளாக செலுத்துவதன் மூலம் கொரோனாவிடம் இருந்து முழு எதிர்பாற்றல் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.