வரவு செலவுத்திட்டத்தின் மூலம் “ஒரு இலட்சம் பணிகள்”எனும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியிலும் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் சமுர்த்தி பயனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டத்திற்கான உறுதிக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டதுடன், 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான கிராம சேவகர் அலுவலக கட்டடத்திற்கான அடிக்கல்லும் இதன்போது நாட்டப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எ.சரத்சந்திர, பிரதேச செயலாளர் நா.கமலதாசன், பொதுமக்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.