2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் எவ்வித வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்காதவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறதா என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கேள்வியெழுப்பியுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அப்போது முப்படைகளின் தளபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஒரு வாக்குமூலம் கூட பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக ஏதேனும் விமர்சனங்கள் இருந்தால், அவர்களும் இது குறித்து தமது மனசாட்சியிடம் கேட்க வேண்டும் என சனத் நிஷாந்த தெரிவித்தார்.