20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சார்பில் பிணை கோரிய மீள்திருத்த விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக புத்தளம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்த இரண்டு மணுக்கள் மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார்.