தமிழ்நாடு ஆளுநரின் டில்லி பயணம் திடீர் என இரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட் தோ்வை இரத்து செய்வதற்கான காரணங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர் நிலைக் குழுவை கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி தமிழக அரசு அமைத்தது.
மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, தனது அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ஜூலை 14ஆம் திகதி வழங்கியது.
எனினும், இந்த மசோதாவை ஆளுநா் ஆா்.என்.ரவி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவுக்கு கடந்த 3ஆம் திகதி மீண்டும் அனுப்பி வைத்தாா்.
இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அதில், பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நாளை கூட்டி, நீட் விலக்கு சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றவும், அதனை ஆளுநருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என் 3 நாள் பயணமாக இன்று டில்லி செல்லவிருந்தார். ஆனால் தற்போது இந்த பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக நாளை சிறப்புக் கூட்டத்தொடர் கூடும் நிலையில் ஆளுநரின் டில்லி பயணம் இரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.