ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு நிதி என்பவற்றை மேலதிக வரிச் சட்டமூலத்தில் உள்ளடக்குவதற்கான சரத்துக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலதிக உபரி வரிச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்ட நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனை கூறியுள்ளார்.
2020 ஏப்ரல் 1, இல் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டில் இருந்து ஊழியர் சேமலாப நிதியம் உட்பட பல நிதிகளுக்கு 25 வீதம் மேலதிக கட்டணம் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
சட்டமூலத்தின்படி, ஓய்வூதிய நிதியம், வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியக் கொடுப்பனவு நிதி அல்லது அதற்கு இணையான நிதியொன்று கம்பனியின் வரையறைக்குள் உள்ளடக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் EPF மற்றும் ETF இலாபங்களுக்கு 25% வரியை விதித்துள்ளது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
மேலும் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக தனியார் துறை ஊழியர்களிடமிருந்து 70 பில்லியன் ரூபாயை எடுத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக கூறினார்.
குறிப்பாக அந்த பணத்தை பிரதேச சபை உறுப்பினர்கள் மூலம் விநியோகிக்க ஆளும் கட்சி திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.