கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள புலனாய்வு பிரிவினரிடம் தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் இருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைக்கும் அத்தகைய முயற்சியை பொறுத்துக்கொள்ள முடியாது என நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஃபெலிக்ஸ் சிசெகெடியின் சிறப்பு பாதுகாப்பு ஆலோசகர் பிரான்சுவா பெயா சனிக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற ஆபிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார்.
சனிக்கிழமை சம்பவத்திற்குப் பின்னர் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் மௌனம் நாட்டில் ஸ்திரமின்மை பற்றிய ஊகங்களைத் தூண்டியுள்ளது.