கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக பாரிஸுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான வாகனங்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
“சுதந்திர கான்வாய்” தடை உத்தரவை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறியதை அடுத்து அவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலையும் மேற்கொண்டனர்.
இதன்போது 300க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும், 54 பேர் கைது செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் முயற்சியில் அடுத்த மூன்று நாட்களுக்கு 7,000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நிறுத்தியுள்ளனர்.