நாடடில் நிலவும் மின்சார நெருக்கடியில் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்தமை போன்ற பல காரணிகள் மின்வெட்டுக்கான காரணங்களாக உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, 03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை இதற்கு முன்னர் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியிருந்தது.
இந்நிலையில், மின்வெட்டு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மின்சாரத்தை துண்டிப்பது தவிர்க்க முடியாது என்றும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இதற்கான பொறிமுறை இன்றைய தினம் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.