ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று(புதன்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்றில் இருந்து தொடர்ந்தும் 15 தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது.
எதிர்வரும்-28 ஆம் திகதி இரவு 07 மணிக்குப் பெரிய சப்பரத் திருவிழாவும், முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், அன்றைய தினம் இரவு நான்கு சாமப் பூசையுடன் மகா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக இடம்பெறுவதுடன் மறுநாள் புதன்கிழமை காலை 6 மணிக்கு கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம், மாலை-06 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறவுள்ளது.