கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 287 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 96 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 6 இலட்சத்த 31 ஆயிரத்து 816 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 899 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.