அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஈஸ்டர் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி செய்யப்பட்ட குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த, குற்றப்புலானாய்வு திணைக்களத்திற்கு இன்று(வியாழக்கிழமை) அழைக்கப்பட்டிருந்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கருத்து மற்றும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும், சட் டநடவடிக்கை எடுக்குமாறும் தாம் இதன்போது கோரியுள்ளதாக அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.