வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வோரிடம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6500 ரூபாய் அறவிடப்படும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. நந்தகுமாரன் அறிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இக்கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த தினங்களில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பரிசோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டு வந்ததுடன் , இலங்கை பிரஜைகளுக்கு முதல் தடவை பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையிலையே நாளை முதல் சகலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக 6500 ரூபாய் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.