இலங்கையில் சுற்றுலாத்துறைக்கான உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த தொலைபேசி செயலி ‘விசிட் ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சுற்றுலாத் துறை தொடர்பான அனைத்து இடங்களுக்கும் பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் கூறினார்.
இந்த தொலைபேசி செயலியானது நாட்டின் சுற்றுலாத்துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுற்றுலா தலங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், பயணத் தகவல்கள், கூகுள் மேப்ஸ், அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா காவல் அவசர சேவைகள் ஆகியவை அந்த செயலியில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.