ஹொங் கொங்கில், காணப்பட்டதைப் போன்று பதற்றமான நிலைமைகளை தவிர்ப்பதற்காக மக்காவோவில் திட்டமிடப்பட்ட தேர்தல் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தம் ஆகியவற்றை தடுக்கும் வகையில் சீனா கடுமையாக்கும் செயற்பாட்டில் களமிறங்கியுள்ளது.
மக்காவோ அரசாங்கம், அதன் 2021-2025 ஐந்தாண்டுத் திட்டத்தை வெளியிடுவது குறித்த டிசம்பர் 16ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தனது நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை முடுக்கிவிடுவதாகவும், தேசியப் பாதுகாப்பு மற்றும் அவற்றைச் செயல்படுத்துதல் தொடர்பான நகரத்தின் சட்ட விதிகளை மேம்படுத்துவதாகவும்’ கூறியதாக வொஸ்ய் ஒப் அமெரிக்கா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால், பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வலுவாக அமுலாக்கவும், பயங்கரவாதம் மற்றும் தகவல் தொடர்பு இடைமறிப்புச் சட்டங்களை முன்னோக்கித் நகர்த்தவும் நுழைவுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும், தேர்தல் முறையை மாற்றியமைக்கவும் அதிகாரிகள் பிறிதொரு வழியில் முயல்கின்றனர் எனவும் வொஸ்ய் ஒப் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக பீஜிங்கால் ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’ என்று கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள் மக்காவோவில் முன்னெடுப்பதற்கு நகர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீன அரசியலில் நிபுணத்துவம் பெற்ற ஹெரிடேஜ் அறக்கட்டளையின் ஆசிய ஆய்வு மையத்திற்கு வருகை தந்த மைக்கேல் கன்னிங்ஹாம், தேர்தல் மாற்றங்கள், மக்காவோவின் கட்டுப்பாட்டை இழக்கும் சாத்தியக்கூறுகளை அகற்றுவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கை எனவும் கூறினார்.
தற்போதுள்ள அமைப்பு ஏற்கனவே பீஜிங் சார்பு ஸ்தாபனத்திற்கு ஆதரவாக வைக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தும் கன்னிங்ஹாம், வரவிருக்கும் ஆண்டுகளில் மற்றும் தசாப்தங்களில் பொதுக்கருத்து அல்லது அரசியல் இயக்கவியல் எவ்வாறு மாறக்கூடும் என்பதைப் பொருட்படுத்தாமல், அரசாங்கம் இப்படியே இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.