பாகிஸ்தானின் பல மருந்தகங்களில் பரசிட்டமோல் கிடைக்காத நிலைமைகள் அதிகரித்துள்ளதாகவும், கறுப்பு சந்தையில் தாராளமாக கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையகத்தின் அதிகாரி ஒருவர், கொரோனா நோயாளிகளுக்கு பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் பரசிட்டமோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு வலிநிவாரணிக்கான தேவையுள்ளவர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரசிட்டமோல் தயாரிப்பதற்கு உரிமத்தினைக் கொண்டிருந்த 15 நிறுவனங்கள் அச்செயற்பாட்டினை முன்னெடுக்கத் தவறியமைக்காக பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது கொரோனா அலையை எதிர்கொள்கிறது. நாடு முழுவதும் ஒரு இலட்சத்துக்கு அதிகமான தொற்றாளர்கள் உள்ளனர்.
பாகிஸ்தானின் கொரோனா நேர்மறை விகிதம் 9.65 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு நாளொன்றுக்கான இறப்புக்கள் அண்மைய நாட்களில் 32ஆகவும் காணப்படுகின்றது.