கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 390 பேர் குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 94 ஆயிரத்து 738ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 625,804 ஆக பதிவாகியுள்ளது.
அதேநேரம், நாட்டில் இதுவரை 15,754 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.