கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர்
வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் போராட்டத் தளத்தை பொலிஸார் அகற்றினர்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த வார தொடக்கத்தில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக திங்களன்று, லிபரல் பிரதமர் தற்காலிக அவசரகால நடவடிக்கைகளை தொடர்ந்து பயன்படுத்துவதை ஆதரித்தார்.
நாடு முழுவதும் நிலைமை இன்னும் பலவீனமாக உள்ளது என்றும் புதிய முற்றுகைகளைத் தடுக்க அவை தேவை என்றும் கூறினார். மேலும், தேவையானதை விட ஒரு நாள் கூட அதிகாரங்கள் நீடிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.