பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திடும் நடவடிக்கைக்கு வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள மக்களும் ஆதரவு தெரிவித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிக்குடியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.