ரஷ்யா – உக்ரைன் போரினால் முழு உலகமும் தற்போது மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இலங்கையும் அவ்வாறானதொரு சூழலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையை நோக்கி அரசாங்கம் கண்ணை மூடிக் கொள்ளாமல், வரக்கூடிய முடிவுகளுக்கு முகங்கொடுக்க நாட்டை தயார்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன வலியுறுத்தினார்.
2014க்குப் பின்னர் கச்சா எண்ணெய் ஒன்றின் விலை 100 டொலர்களைத் தாண்டியுள்ளது என்றும் இது இந்த ஆண்டு மார்ச் நடுப்பகுதியில் 120 டொலர்களை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
பல நாடுகள் மந்தநிலைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் நிலையில் இலங்கையில் இருந்து அத்தகைய தயார்நிலையை தங்களால் எதிர்பார்க்க முடியாது என ருவான் விஜேவர்தன குற்றம் சாட்டினார்.