இங்கிலாந்தில் யூத சமூகத்திற்கு எதிராக இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலால் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொலை செய்ய சதி செய்ததாக இரண்டு நபர்கள் குற்றவாளிகளாகக் செவ்வாயன்று கண்டறியப்பட்டனர்.
இந்த திட்டமிடப்பட்ட தாக்குதல் நாட்டில் மீண்டும் தீவிரவாதக் குழுக்கள் எழுச்சி பெறும் அபாயத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒக்டோபரில் அருகிலுள்ள வடமேற்கு நகரமான மான்செஸ்டரில் ஒரு ஜெப ஆலயத்தில் நடந்த கொடிய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 38 வயதான வாலித் சதௌய் மற்றும் 52 வயதான அமர் ஹுசைன் ஆகியோர் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று அடைாயளம் காணப்பட்டனர்.
இவர்கள் முடிந்தவை பல யூதர்களைக் கொல்ல தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திடட்மிட்டிருந்ததாக புலனாய்வாளர்களின் விசாரணையில் கண்டறியப்பட்டதாக காவல்துறை மற்றும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
அவர்களின் திட்டங்கள் நிறைவேறியிருந்தால், அது “நாட்டின் வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாக” மாறியிருக்கும் என்று வடமேற்கு இங்கிலாந்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையின் பொறுப்பாளரான உதவி தலைமை பொலிஸ் அதிகாரி ரோபர்ட் பாட்ஸ் கூறினார்.

















