டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் இன்று (24) கடுமையான எச்சரிக்கை விடுத்தது.
அந்த உத்தரவில், குடிமக்களுக்கு சுத்தமான காற்று கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் அல்லது காற்று சுத்திகரிப்பான்கள் (air purifiers) மீதான ஜிஎஸ்டி வரியை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
பொது சுகாதார அவசரநிலைக்கு மத்தியில் தேவைப்படும் குறைந்தபட்ச நடவடிக்கையாக ஜிஎஸ்டி அமைப்பின் கீழ் 18% வரியைக் குறைப்பது மினவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா (DK Upadhyaya ) மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா (Tushar Rao Gedela) ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
காற்று சுத்திகரிப்பான்களை ‘மருத்துவ சாதனங்கள்’ என வகைப்படுத்தி அவற்றின் ஜிஎஸ்டி வரியை 5% ஆகக் குறைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை வலியுறுத்தி சட்டத்தரணி கபில் மதன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து ஆபத்தான அளவை எட்டியுள்ளது.
இன்று அதிகாலை காற்று மாசுபாடு அளவீடுகள் நொய்டாவில் 355 ஆகவும், டெல்லியில் 349 ஆகவும் குருகிராமில் 316 ஆகவும் மற்றும் காஜியாபாத்தில் 309 ஆகவும் இருந்தன.
















