2022 உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ரஷ்யா, சர்வதேச போட்டிகளில் இருந்து மறு அறிவித்தல் வரை பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியம் மற்றும் ஃபிஃபா ஆகியன இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஷ்ய மற்றும் பெலரஸின் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை, எந்தவொரு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குகொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் சர்வதேச ஒலிப்பிக் குழு பரிந்துரைத்துள்ளது.
அனைத்து நாடுகளின் விளையாட்டுத்துறை தலைமைத்துவங்கள் மற்றும் நிர்வாகத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குறித்த இரு நாடுகளும் ஒலிம்பிக் விதிகளை மீறி செயற்பபட்டுள்ளமையால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.