முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது மேலும் ஒரு வழக்கினை பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அவர் மீது மற்றுமோர் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் அமைச்சராக இருந்தபோது, திருவொற்றியூர் தண்ணீர் ஓடை குப்பம் பகுதியை சேர்ந்த 83 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு எழுந்துள்ளது.
இது குறித்து சட்ட வல்லுனர்கள், பொலிஸார் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.