இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாம் கட்டமாக நிவாரண உதவி பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்தார்.
குறித்த நிவாரண பொருட்களுடன் இன்று (வியாழக்கிழமை) விமானம் ஒன்று போலந்து வழியாக பயணிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதில் இரண்டு டன் மருந்துகள், மற்றும் முக கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், குளிரை தாங்கும் ஆடைகள், கூடாரங்கள், தண்ணீர் சேமிப்பு தொட்டிகள், பாய்கள், சோலார் விளக்குகள் ஆகியவற்றை தேசிய பேரிடர் மீட்பு பணி உக்ரைனுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இதேபோல் முன்னதாக இரண்டு விமானங்கள் நிவாரண உதவிப் பொருட்களுடன் உக்ரைனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.