வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் தமிழகத்தின் பலப் பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 84 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அளித்த செவ்வியில், மேற்படி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகரும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக தஞ்சாவூர், திருவாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் செங்கல்பட்டு, ஆகிய பகுதிகளில் கனமழையும், நாளை மிக கனமழையும் பெய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.