அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், அவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய தினம் நடத்தவுள்ள விசேட ஊடக சந்திப்பில் தங்களது நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளது.