ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா சபையில் மூன்று முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்தியா நடுநிலையாக செயற்பட்டது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா மீது பொருளாதார தடையை அறிவிக்கவும் ஜோபைடன் அரசுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் வலுயுறுத்தியுள்ளது.
இந்தியா தனது எல்லைகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து முரண்பாட்டை வலுத்து வரும் நிலையையும் சுட்டிக் காட்டிய அமெரிக்கா, அண்டை நாடுகளுடன் பிரச்சினை நீடித்த போதும் உள்நாட்டில் பிரதமர் மோடி சக்தி வாய்ந்த தலைவராக விளங்குவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது.