இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற .10லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூடைகளை நேற்று போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .
தூத்துக்குடியில் இருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க கியூ பிரான்ச் போலீசார் மாவட்டம் முழுவதும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்ட கியூ பிரான்ச் போலீசார் 2 படகுகளில் சோதனையிட்ட போது மொத்தம் 14 மூடைகளில் 550 கிலோ ஏலக்காய் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு 10லட்சம் என்று கூறப்படுகிறதோடு , மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றமையும் தெரியவந்தள்ளது . மேலும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனமை குறிப்பிடதக்கது .