நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னர், கேன்களில் எரிபொருளை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருளை ஏற்றிய பின்னர் பல கேன்களில் நிரப்புவார்கள். இதனால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்களுக்கு நிரப்ப போதுமான எரிபொருள், விரைவாக தீர்ந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5,000 ரூபாய்க்கு சிலர் எரிபொருள் கேன்களை விற்பனை செய்வதாகவும், அதுவே வியாபாரமாக மாறியுள்ளதாகவும் தகவல் கிடைத்தது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் குறைந்தது ஒரு பவுசர் எரிபொருள் நேற்று (திங்கட்கிழமை) வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஆகவே நாட்டில் பெட்ரோல் அல்லது டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
மேலும் நாளைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இருக்காது என்றும் அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டார்.