தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (திங்கட்கிழமை) இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தனியார் மயப்படுத்தல் மற்றும் புதிய மாணவர் அனுமதி போன்ற விடயங்களை முன்வைத்தும், பல்கலைக்கழகத்தை திறக்குமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்காக பல்வேறு பல்கைக்கழகங்களிலும் இருந்தும் மாணவர்கள் வந்து கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.