பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் பல பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பான தனது தீர்மானத்தை உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய நிலையில் அதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வாசித்திருந்தார்.
அதில் பிரிவு 2 அரசியலமைப்பின் எந்த விதிக்கும் முரணாக இல்லை என்றும் 3 ஆவது சரத்து முரணாக காணப்படுவதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
3 ஆவது பிரிவை நிறைவேற்ற வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்றும் இல்லையெனில் விதிகள் திருத்தப்பட்டால் முரணாகாது என்றும் அறிவித்துள்ளது.
மேலும் 5 ஆவது சரத்து அரசியலமைப்பின் எந்த விதிக்கும் முரணாக இல்லை என்றும் 6 ஆவது சாரத்தில் சில பிரச்சினைகள் காணப்படுவதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு 10வது சரத்து திருத்தப்பட வேண்டும் என்றும் 11வது சரத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை 12 ஆவது சரத்தின் உட்பிரிவு 26 (2) அரசியலமைப்பின் 12 (1) க்கு முரணாக இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.
இருப்பினும் அதனையும் திருத்தி அமைத்தால் அரசியலமைப்பின் எந்த விதிகளுக்கும் முரணாக அமையாது என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.