உக்ரைனிலிருந்து இந்தியா்களை மீட்பதில் மத்திய அரசு தாமதமாக செயல்பட்டதன் காரணமாகவே அங்கு மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கடந்த காலத்தில் வளைகுடா போரின்போதும், லெபனான், லிபியா மற்றும் ஈராக்கில் இருந்தும் இந்திய விமானப் படை, கடற்படை சாா்பில் பெரிய அளவில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எவ்வித பாரபட்சமும் காட்டப்படாமல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் தற்போது உக்ரைனில் இருந்து பாரபட்சமின்றி அனைத்து இந்தியா்களையும் மீட்க முயற்சிகளை மேற்கொள்வது மத்திய அரசின் கடமை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.