ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் ஊடக உக்ரைனுக்கு சோவியத் தயாரிப்பான Mig-29 போர் விமானங்கள் அனைத்தையும் அனுப்பும் போலந்தின் யோசனையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவுடன் போட்டியிடும் வான்வெளியில் பறப்பது முழு நேட்டோ கூட்டணிக்கும் கடுமையான கவலையை ஏற்படுத்தும் என கூறி பென்டகன் அதனை மறுத்துள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்கு இராணுவ ஜெட் விமானங்களை வழங்குமாறு மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு போலந்து அழைப்பு விடுத்தது.
உக்ரேனிய விமானிகள் உண்மையில் போலந்திற்குள் எல்லையைத் தாண்டி அவர்களை மீண்டும் உக்ரைனுக்குள் பறக்கவிட முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.