ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியில் சந்திப்பார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய பின்னர் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாக அமையவுள்ளது.
இந்த சந்திப்பு மார்ச் 10 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இராஜதந்திர மட்ட தகவல்கள் மார்ச் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் இதுவரை சாதகமாக முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.