நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்றைய தினம்(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு அவர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைத்தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சர் பதவிகளில் இருந்து விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.















