பதுளை, ஹாலிஎல, உடுவரவத்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று(புதன்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர் ஹாலிஎல, உடுவரவத்தையில் வசிக்கும் 18 வயதுடைய பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போதே அவர் இவ்வாறு கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் 33 வயதுடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.