அரச உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த விசேட எரிபொருள் கொடுப்பனவுகள் முற்றாக நிறுத்தப்படுவது தொடர்பான சுற்றறிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அமைச்சின் செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 225 லீற்றருக்கு மேலதிகமாக விசேட கடமைகளுக்காக வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், விசேட கடமை எரிபொருள் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைதூர பிரதேசங்களுக்கான கலந்துரையாடல்களை ZOOM தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.